கடந்த 7 மாதங்களில் 9 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல் 

கடந்த 7 மாதங்களில் 9 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல் 

கடந்த 7 மாதங்களில் 9 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல் 

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2021 | 2:41 pm

Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த 7 மாதங்களில் மாத்திரம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இதுவரை, 473 கிலோகிராம் ஹெரோயின், 300 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 3, 485 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சாவுடன் 8,509 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

இதனடிப்படையில், கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 72 கோடி ரூபாவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்