வர்த்தகம்சார் விவசாயத்திற்காக பசளை இறக்குமதி

வர்த்தகம்சார் விவசாய நடவடிக்கைகளுக்கான பசளை இறக்குமதிக்கு அனுமதி

by Staff Writer 30-07-2021 | 3:14 PM
Colombo (News 1st) வர்த்தகம்சார் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான பசளையை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை மீள வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இவ்வாறான பயிர்செய்கைகளுக்கு உயர் தரத்திலான பசளை வகைகளே தேவைப்படுவதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் வர்த்தகத்துறைசார் விவசாயிகளின் பிரதிநிதிகள், அமைச்சிற்கு விடயங்களை முன்வைத்திருந்ததாகவும் அவர் கூறினார். அதற்கமைய, உயர் தரத்திலான பசளை இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதற்குரிய அதிவிசேட வர்த்தமானியை வௌியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே.ஜயசிங்க குறிப்பிட்டார்.