40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்

பண்டாரகமயில் 40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்

by Staff Writer 30-07-2021 | 3:47 PM
Colombo (News 1st) பண்டாரகமயில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 40 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 40 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியானது என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். துபாயிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் இந்த போதைப்பொருள் கடத்தல் வழிநடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இரண்டரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் மீகொடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்த 02 கிலோ 450 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மீகொடையை சேர்ந்த 40 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.