வர்த்தகம்சார் விவசாய நடவடிக்கைகளுக்கான பசளை இறக்குமதிக்கு அனுமதி

வர்த்தகம்சார் விவசாய நடவடிக்கைகளுக்கான பசளை இறக்குமதிக்கு அனுமதி

வர்த்தகம்சார் விவசாய நடவடிக்கைகளுக்கான பசளை இறக்குமதிக்கு அனுமதி

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2021 | 3:14 pm

Colombo (News 1st) வர்த்தகம்சார் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான பசளையை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை மீள வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவ்வாறான பயிர்செய்கைகளுக்கு உயர் தரத்திலான பசளை வகைகளே தேவைப்படுவதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் வர்த்தகத்துறைசார் விவசாயிகளின் பிரதிநிதிகள், அமைச்சிற்கு விடயங்களை முன்வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய, உயர் தரத்திலான பசளை இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதற்குரிய அதிவிசேட வர்த்தமானியை வௌியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே.ஜயசிங்க குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்