சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் 6 மாதங்களில் 4,700 முறைப்பாடுகள் பதிவு

சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் 6 மாதங்களில் 4,700 முறைப்பாடுகள் பதிவு

சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் 6 மாதங்களில் 4,700 முறைப்பாடுகள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2021 | 2:27 pm

Colombo (News 1st) சிறுவர்கள் மீதான பல்வேறு துன்புறுத்தல்கள் தொடர்பில் வருடத்தின் முதல் 6 மாதங்களில் 4,700 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவற்றில் 73 முறைப்பாடுகள் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பானவை என அதிகார சபையின் தலைவர் முதித் விதானபத்திரன குறிப்பிட்டார்.

கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி ஓய்வு பெற்றுள்ளதால், அந்த பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

இந்த பதவி வெற்றிடத்திற்கு பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித் விதானபத்திரன சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்