சர்வதேச ஆட்கடத்தலுக்கு எதிரான தினம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச ஆட்கடத்தலுக்கு எதிரான தினம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2021 | 9:16 pm

Colombo (News 1st) சர்வதேச ஆட்கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கவனயீர்ப்பினை முன்னெடுத்தனர்.

​மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வலுப்பெற்றது.

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்

இதனிடையே, யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அறவழி போராட்டமொன்று இடம்பெற்றது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்