அதிபர்கள், ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை 19 ஆவது நாளாக முன்னெடுப்பு

by Staff Writer 30-07-2021 | 8:31 PM
Colombo (News 1st) சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து இன்றுடன் 19 நாட்களாகின்றன. இன்றும் பல நகரங்களில் ஒன்று கூடிய ஆசிரியர்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆசிரியர், அதிபர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இணைய வழி கற்பித்தல் செயற்பாட்டிலிருந்தும் ஒதுங்கியுள்ளனர்.