அலாஸ்காவில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அலாஸ்காவில் 8.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

by Bella Dalima 29-07-2021 | 3:12 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள தீவில் 8.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வடக்கு மரினா மற்றும் குகம் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் கடலில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 10.15 மணிக்கு (0615 GMT வியாழக்கிழமை) நிலநடுக்கும் பதிவாகியுள்ளது. வீடுகள் குலுங்கியதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பொதுமக்களை கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அலாஸ்கா தீவுகளில் கடும் சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனினும், சேத விபரங்கள் குறித்து தகவல் இல்லை.