வருட இறுதிக்குள் 15 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி –  லலித் வீரதுங்க

வருட இறுதிக்குள் 15 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி – லலித் வீரதுங்க

வருட இறுதிக்குள் 15 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி – லலித் வீரதுங்க

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2021 | 1:16 pm

Colombo (News 1st) கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்கள் என லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தைத் திறந்து வைத்து நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் முதலாம் கட்டத்தின் கீழ், 30 வயதுக்கு மேற்பட்டோரில் 11.5 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் என கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் 04 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் என அவர் கூறியுள்ளார்.

இவ் வருட இறுதிக்குள் நாட்டு சனத்தொகையில் 15 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படும் எனவும் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்