by Staff Writer 29-07-2021 | 9:45 AM
Colombo (News 1st) சீனா அணுசக்தி ஏவுகணைகளை சேமித்து வைக்கும் திறனை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஸின்ஜியாங் (Xinjiang) பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட செய்மதிப் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் சம்மேளனம் இதனை அறிவித்துள்ளது.
சீனாவின் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மேற்கு சீனாவில், அணுவாயுதங்களை எறிவதற்கு ஏதுவாக பதுக்கிவைக்கும் இரண்டாவது நிலக்கீழ் பகுதி அமைக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ள இரண்டாவது சந்தர்ப்பமாகும்.
கன்சு (Gansu) மாகாணத்தின் யுமேன் (Yumen) பாலைவனப் பகுதியில் இவ்வாறு 120 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் கடந்த மாதத்தில் செய்தி அறிக்கையிட்டிருந்தது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்ததை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த செய்தி வௌியாகியுள்ளது.