கிராம மட்டத்தில் சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தார் மைத்திரிபால சிறிசேன

கிராம மட்டத்தில் சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தார் மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2021 | 8:59 pm

Colombo (News 1st) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படுகின்ற கருத்தரங்கு இன்று காலியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

காலி மாவட்டத்தின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள், முகாமையாளர்களும் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கருத்தரங்கு நிறைவு பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பதிலளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்