மிகப்பெரிய மாணிக்கக் கல்லை ஏலத்தில் விட தீர்மானம்

உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கற்களின் திரட்சியை சர்வதேச ஏலத்தில் விட தீர்மானம்

by Staff Writer 29-07-2021 | 10:22 AM
Colombo (News 1st) இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகிலே மிகப்பெரிய மாணிக்கக் கற்களின் திரட்சியை சர்வதேச ஏலத்தில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக அதிகபட்ச விலையை நிர்ணயிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாணிக்கக் கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க கூறினார். இந்த மாணிக்கக் கற்களின் திரட்சியை கொள்வனவு செய்வதற்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு கொள்வனவாளர்கள் பிணைமுறி சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 510 கிலோகிராம் நிறையுடைய ஆர்னூல் வகையை சேர்ந்த குறித்த மாணிக்கக் கற்களின் திரட்சி தற்போது பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். மாணிக்கக் கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் மதிப்பீட்டிற்கமைய இதன் பெறுமதி, 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும்.