இலங்கை வரலாற்றில் அதிக பெறுமதியான பணம் அச்சிடப்பட்டது

இலங்கை வரலாற்றில் அதிக பெறுமதியான பணம் அச்சிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2021 | 8:27 pm

Colombo (News 1st) இந்த வருடம் ஒரே நாளில் அதிக பெறுமதியான பணம் நேற்று (28) அச்சிடப்பட்டுள்ளது.

நேற்று 213.48 பில்லியன் ரூபா புழக்கத்திற்கு விடுவிக்கப்பட்டதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வௌிநாட்டு கடன் செலுத்தப்பட்டதை அடுத்து, இந்த பணம் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் பொருளாதார ஸ்திரநிலை உள்ளதாக அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்