வௌிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

வௌிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

வௌிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2021 | 4:43 pm

Colombo (News 1st) வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தவர்களுக்கே கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்று முதல் தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, மேல் மாகாணத்திலிருந்து வௌிநாடுகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பணியாளர்கள் தொழிலுக்காக செல்லும் அநேகமான நாடுகளில் Pfizer தடுபூசி ஏற்றுக்கொள்ளப்படுவதால், பணியாளர்களுக்கு அந்த தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்ருக்கும் , துறைசார் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் தொடர்ந்தும் Pfizer தடுபூசியை ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று 1200 பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்