English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Jul, 2021 | 8:18 pm
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டமையாலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.
குறித்த தற்கொலை குண்டுதாரியால் வெல்லம்பிட்டியில் செப்பு தொழிற்சாலை 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த காலப்பகுதியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக ரிஷாட் பதியுதீன் செயற்பட்டதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு சொந்தமான இரும்பு மற்றும் உலோகப்பொருட்களில் 86 வீதமானவற்றை குறித்த செப்பு தொழிற்சாலைக்கு கைத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சண்முகம்பிள்ளை பாலசுப்ரமணியம் என்பவர் அப்போதைய ஜனாதிபதி செயலாளரின் ஆலோசனையை பெறாது பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.
குறித்த தற்கொலை குண்டுதாரியின் செப்பு தொழிற்சாலைக்கு, விசேட அனுசரணை வழங்குவதற்கு அப்போதைய கைத்தொழில் அமைச்சராக செயற்பட்ட ரிஷாட் பதியுதீனும் அவரின் இணைப்புச் செயலாளரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்பதை நம்ப முடியாது எனவும் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியமை, ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, சண்முகம்பிள்ளை பாலசுப்ரமணியம் என்பவர் வௌிநாட்டிற்கு சென்றுவிட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போதே இந்த விடயங்கள் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் இன்று உத்தரவிட்டனர்.
24 Jun, 2022 | 05:45 PM
08 Jun, 2022 | 05:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS