சிறுவர் தொழிலாளர்கள் குறித்து அறிவிக்க இலக்கம்

சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்

by Staff Writer 28-07-2021 | 10:13 AM
Colombo (News 1st) சிறுவர் தொழிலாளர்களை பணிக்கமர்த்தியுள்ள இடங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான இடங்கள் தொடர்பில் அறிந்திருப்பின், 011 2 433 333 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 16 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களை தேடி நேற்று (27) முதல் மேல் மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று முகத்துவாரம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 30 இடங்கள் சோதனையிடப்பட்டுள்ளன. இந்த தேடுதல் நடவடிக்கைள் இன்றைய தினமும் (28) முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்