கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2021 | 8:56 pm

Colombo (News 1st) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒன்லைன் கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல பல்கலைக்கழங்களில் அமைதியான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்திலும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதுடன், சட்ட பீடத்திற்கு அருகில் பேரணி ஆரம்பமானது.

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதுடன், பேராதனை பக்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலஹா சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜரட்ட, ருகுணு மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது. வவுனியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள பம்பைமடு பகுதியில் இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனிடையே, யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்