உதய கம்மன்பிலவிற்கு எதிரான வழக்கு: 3 அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

உதய கம்மன்பிலவிற்கு எதிரான வழக்கு: 3 அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

உதய கம்மன்பிலவிற்கு எதிரான வழக்கு: 3 அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2021 | 3:02 pm

Colombo (News 1st) அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பில் சாட்சியம் பதிவு செய்வதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவுஸ்திரேலிய பிரஜைகள் மூன்று பேருக்கு அறிவித்தல் அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வௌிவிவகார அமைச்சினூடாக இந்த அறிவித்தலை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று உத்தரவிட்டார்.

போலி ஆவணத்தை பயன்படுத்தி, அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து 20 மில்லியன் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் உதய கம்மன்பிலவிற்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி யுவான் அபேவிக்ரம முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை சாட்சி விசாரணைகளை ஒத்திவைத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்