ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க நடவடிக்கையை திங்கட்கிழமை வரை தொடர தீர்மானம்

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க நடவடிக்கையை திங்கட்கிழமை வரை தொடர தீர்மானம்

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க நடவடிக்கையை திங்கட்கிழமை வரை தொடர தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2021 | 7:30 am

Colombo (News 1st) ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு 17 ஆவது நாளை எட்டியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான நேற்றைய (27) பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றது.

அதற்கமைய, தாம் முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை வரை தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனிடையே ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணியாற்றுவதற்கு தயாராகுமாறு பிரதமர் அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரிடம் கூறியுள்ளார்.

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்