16 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளை வடக்கு, கிழக்கில் உள்ளவர்களுக்கு ஏற்ற நடவடிக்கை

16 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளை வடக்கு, கிழக்கில் உள்ளவர்களுக்கு ஏற்ற நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2021 | 3:28 pm

 Colombo (News 1st) இன்று (27) நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 16 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களுக்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளை இலங்கைக்கான சீன தூதுவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் கையளித்தார்.

இதனை தொடர்ந்து 16 இலட்சம் தடுப்பூசிகளையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றுவதற்காக அவற்றை சுகாதார அமைச்சரிடம் ஜனாதிபதி கையளித்துள்ளார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர், வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் சீன தூதரகத்தின் அரசியல்துறை அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தடுப்பூசி ஏற்றல் செயற்பாட்டில் 72 வீதமான தடுப்பூசிகள் Sinopharm தடுப்பூசிகள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய, 27 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் இதுவரை நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத நிறைவில் நாட்டிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை ஏற்ற முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சீன மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்