வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 9 மடங்கினால் அதிகரிப்பு

by Staff Writer 27-07-2021 | 8:25 AM
Colombo (News 1st) கடந்த இரண்டு தசாப்தங்களில் நாட்டில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 மடங்கினால் அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடத்திலும் வாய் புற்றுநோயினால் புதிதாக 2,700 பேர் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு பணிப்பாளர், பொது சுகாதார விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரண தெரிவித்துள்ளார். வாய் புற்றுநோயை இல்லாதொழிக்கும் நோக்கில் தலை மற்றும் கழுத்து தொடர்புடைய புற்றுநோய் நாள் இன்று (27) நினைவுகூரப்படுகின்றது. 'வாய் சுகாதாரத்தைப் பேணுவதற்கு பாக்கு பாவனையை நிறுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் மக்களை விழிப்புணர்வூட்டும் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு பணிப்பாளர், பொது சுகாதார விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரண மேலும் தெரிவித்துள்ளார்.