Colombo (News 1st) மேலும் 48 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, இதுவரை 1,185 பேருக்கு இன்று COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,99,366 ஆக அதிகரித்துள்ளது.
23,678 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான 1,349 பேர் இன்று குணமடைந்துள்ளதுடன், இதுவரை 2,70,356 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தின் பின்னர் நாட்டில் பதிவாகும் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிகிறது. அதன் பிரதிபலனாக மே மாதத்தில் நாட்டில் பயணத்தடையும் விதிக்கப்பட்டது.
மே மாதம் முதலாம் திகதியளவில் நாட்டில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,06,488 ஆக அதிகரித்தது. மே 31 ஆம் திகதி அந்த எண்ணிக்கை 1,81,0003 அதிகரித்தது. அதற்கமைய, மே மாதத்தில் மாத்திரம் 74,515 COVID நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஜூன் மாதம் முதலாம் திகதியளவில் 1,87,186 COVID நோயாளர்கள் பதிவாகினர். ஜூன் மாத இறுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை 2,53,596 ஆக அதிகரித்தது. அதன்படி, ஜூன் மாதத்தில் மாத்திரம் 66,410 COVID நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதம் முதலாம் திகதி 2,55,479 COVID நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். ஜூலை மாதத்தில் கடந்த 25 நாட்களில் மாத்திரம் புதிதாக 36,704 COVID நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே COVID டெல்டா பிறழ்வு தொடர்பில சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.