குருனல் பாண்ட்யாவிற்கு கொரோனா

குருனல் பாண்ட்யாவிற்கு கொரோனா: இலங்கை - இந்தியா இடையிலான போட்டி பிற்போடப்பட்டது

by Staff Writer 27-07-2021 | 6:43 PM
Colombo (News 1st) இந்திய கிரிக்கட் அணி வீரர் குருனல் பாண்ட்யாவிற்கு (Krunal Pandya) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டி நாளை (28) வரை பிற்போடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, தொடரின் இறுதிப் போட்டி நாளையும் எதிர்வரும் வியாழக்கிழமையும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.