பாலித்த பெர்னாண்டோ, நிஸங்க சேனாதிபதி விடுதலை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்கில் பாலித்த பெர்னாண்டோ, நிஸங்க சேனாதிபதி ஆகியோர் விடுதலை

by Staff Writer 27-07-2021 | 1:58 PM
Colombo (News 1st) மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியமை மற்றும் அந்த நிறுவனத்திடம் 355 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ மற்றும் அவன்ற் கார்ட் தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதி ஆகியோர் இன்று (27) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாதென்பதால் குற்றப்பத்திரத்தை மீள பெறுவதற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவரும் தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் துஷார ஜயரத்ன மன்றில் தெரிவித்துள்ளார். குறித்த ஆணையாளர்கள் மூவரினதும் கட்டளையின்றி குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து அவற்றை மீள பெற தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, அவன்ற் கார்ட் தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ ஆகியோரை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று உத்தரவிட்டார்.