மீன்பிடி சட்டமூலத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு

புதிய மீன்பிடி சட்டமூலத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தில் மீனவர்கள் கண்டன போராட்டம்

by Staff Writer 27-07-2021 | 5:47 PM
Colombo (News 1st) இந்திய மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் ராமேஸ்வரம் - மண்டபம் பகுதியில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில் மீனவர்களுக்கு எதிராக இந்திய கடல்சார் மீன்வள சட்டமூலம் தாக்கல் செய்யப்படவுள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விசைப்படகுகளிலும் கறுப்புக் கொடி கட்டி மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலும் ராமேஸ்வரம் - சங்குமால் பகுதியிலும் மீனவர்கள் மத்திய அரசுக்கு எதிராக நேற்று (26) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டமூலத்தில் கடல் எல்லை வரையறை, எல்லை தாண்டும் மீனவர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை, மீன்பிடிக்க செல்லும்போது அனுமதிச்சீட்டு பெறுவதற்கான கட்டணம், மீன்களுக்கான விலை நிர்ணயம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக பொலிஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.