வட மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் இன்று (26) கடமைகளைப் பொறுப்பேற்றார்

வட மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் இன்று (26) கடமைகளைப் பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2021 | 9:07 pm

Colombo (News 1st) வட மாகாண சபையின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சமன் பந்துலசேன இன்று (26) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ். கைதடியிலுள்ள வட மாகாண சபை பிரதம செயலாளர் அலுவலகத்தில் சமன் பந்துலசேன இன்று காலை தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வட மாகாண பிரதம செயலாளராக இதற்கு முன்னர் கடமையாற்றிய அ. பத்திநாதன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதையடுத்து, சமன் பந்துலசேன பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்