துனிசியாவில் பாராளுமன்றம் கலைப்பு; பிரதமர் பதவி நீக்கம்

துனிசியாவில் பாராளுமன்றம் கலைப்பு; பிரதமர் பதவி நீக்கம்

துனிசியாவில் பாராளுமன்றம் கலைப்பு; பிரதமர் பதவி நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2021 | 4:57 pm

Colombo (News 1st) வட ஆபிரிக்க நாடான துனிசியாவின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டு ஜனாதிபதியினால் பிரதமர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

துனிசியாவில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி Kais Saied அறிவித்துள்ளதுடன், பிரதமர் Hicham Mechichi பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டி அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

12 மில்லியன் சனத்தொகை கொண்ட துனிசியாவில் சுமார் 18,000 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து குறித்த அறிவிப்பை ஜனாதிபதி Kais Saied பிறப்பித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவி ஏற்றதுடன், இடைக்கால பிரதமர் ஒருவருக்கு பதிலாக Hicham Mechichi பிரதமராக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்