வவுனியா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன

வவுனியா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன

வவுனியா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2021 | 2:46 pm

Colombo (News 1st) அம்பாறை, வவுனியா, ஹம்பாந்தோட்டை, வத்துப்பிட்டிவல (கம்பஹா) மற்றும் பொலன்னறுவையில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளர்களை அடையாளங்காண்பதற்காக மேற்கொள்ளப்படும் PCR பிரிசோதனைகளை மேலும் துரிதப்படுத்துவதற்காக, புதிய ஆய்வுக்கூடங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது 39 ஆய்வுக்கூடங்கள் உள்ளதாக அமைச்சின் இரசாயன சேவை பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் சுதத் தர்மரட்ன குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டதை அடுத்து, நாளாந்த PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மே மாதத்தில் சுமார் 7 இலட்சம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கடந்த மாதம் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்