பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2021 | 3:04 pm

Colombo (News 1st) 2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (26) முதல் மீண்டும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்ததால், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணபிப்பதற்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த மாதம் 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

எனினும், அக்காலப்பகுதியில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஜூலை 30 ஆம் திகதி வரையில் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்