நாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடும்

நாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடும்

நாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடும்

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2021 | 5:11 pm

Colombo (News 1st) நாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய, மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்