டோக்கியோ ஒலிம்பிக்: முதல் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது சீனா

டோக்கியோ ஒலிம்பிக்: முதல் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது சீனா

டோக்கியோ ஒலிம்பிக்: முதல் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது சீனா

எழுத்தாளர் Bella Dalima

24 Jul, 2021 | 8:34 pm

Colombo (News 1st) டோக்கியோ ஒலிம்பிக் விழாவில் முதல் தங்கப்பதக்கத்தை சீனா சுவீகரித்தது.

இலங்கை வீர, வீராங்கனைகள் சிலரும் இன்று போட்டிகளில் பங்கேற்றனர்.

குறிபார்த்து சுடும் போட்டிகளில் 10 மீட்டர் Air rifle தகுதிகாண் சுற்றில் இலங்கையின் டெஹானி எகொடவெல பங்கேற்றார். போட்டியில் அவருக்கு 49 ஆவது இடம் கிடைத்தது.

மகளிருக்கான 100 மீட்டர் Butterfly நீச்சல் போட்டியில் இலங்கையின் அனிகா கபூர் முதல் சுற்றில் பங்கேற்றார். போட்டியை 1 நிமிடம் 5.33 செக்கன்ட்களில் பூர்த்திசெய்த அவர் தனது குழுவில் இரண்டாமிடத்தைப் பெற்றார்.

முதல் சுற்றில் ​5 போட்டிகள் நடத்தப்பட்டதுடன், முடிவில் சிறந்த நேரப்பெறுதியை அடைந்த முதல் 16 வீராங்கனைகள் அரை இறுதிக்கு தகுதிபெற்றனர். நேரப்பெறுதியின் பிரகாரம் அனிகா கபூர் 32 ஆவது இடத்தை அடைந்தார்.

ஆடவருக்கான பட்மிண்டன் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றுப்போட்டியில் பங்கேற்ற நிலுக்க கருணாரத்ன எதிராளியான சீன தாய்பேயின் வெங் சூ வே-யிடம் 2 – 0 என தோல்வியடைந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் விழாவில் முதல் தங்கப்பதக்கத்தை சீனா வெற்றிகொண்டது. குறிபார்த்து சுடும் போட்டிகளின் மகளிருக்கான 10 மீட்டர் Air rifle பிரிவில் சீனாவிற்கு தங்கப்பதக்கம் கிட்டியது.

சீனாவின் Yang Qian தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்