கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2021 | 2:21 pm

Colombo (News 1st) நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் டெல்டா பிறழ்வு பரவி வரும் நிலையில், மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தினார்.

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை கலாசார ரீதியில் நடத்துவதற்கு அனுமதி வழங்கும் வகையிலேயே, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எனினும், அந்த தளர்வுகளையும் மீறி நிகழ்வுகள் நடத்தப்படுமாயின், எதிர்வரும் நாட்களில் மீண்டும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையிலும் மரணங்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்படுமாயின், கடந்த மே மாதம் போன்று இறுக்கமான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், டெல்டா பிறழ்வானது வடக்கு, கிழக்கு, மேல், தென் மாகாணங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதன் அடிப்படையில், டெல்டா பிறழ்வு நாடு முழுவதும் பரவியுள்ளமை புலப்படுவதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்