இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2021 | 7:02 pm

Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான 1,220 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,94,333 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கொரோனா நோயாளர்கள் 957 பேர் இன்று குணமடைந்தனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,66,665 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்தது.

மேலும் 43 கொரோனா மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. 26 ஆண்களும் 17 பெண்களும் இதில் அடங்குகின்றனர்.

இதன் பிரகாரம், இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4002 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 568 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

30 வயதிற்கு குறைந்த 5 பேர் கடந்த இரண்டு வாரங்களுக்குள் COVID தொற்று காரணமாக உயிரிழந்ததுடன், 30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 139 பேர் குறித்த காலப்பகுதியில் COVID தொற்றால் உயிரிழந்தனர்.

60 வயதிற்கு மேற்பட்ட 424 பேர் கடந்த இரண்டு வாரங்களில் COVID தொற்றினால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்