வெற்றிலைக்கேணியில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

வெற்றிலைக்கேணியில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

வெற்றிலைக்கேணியில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2021 | 2:39 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி பகுதியில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து 107 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டைக்காடு – வெற்றிலைக்கேணி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கேரள கஞ்சா அடங்கிய 16 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது, வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்து கேரள கஞ்சா அடங்கிய மேலும் 24 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் முள்ளியான் பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்