டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமற்போன யுவதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை

டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமற்போன யுவதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை

டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமற்போன யுவதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2021 | 4:17 pm

Colombo (News 1st) ஹட்டன் – பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமற்போன யுவதியை தேடும் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தினரின் உதவியிடன் இன்றும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

நண்பர்கள் மூவருடன் நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த யுவதி வழுக்கி வீழ்ந்து காணாமற்போனதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

லிந்துலை, சென் தோமஸ் தோட்டத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் வழுக்கும் நிலைமை காணப்படுவதால், அப்பகுதியில் நுழைய தடை விதித்து அமைக்கப்பட்டுள்ள ​வேலியைத் தாண்டியே யுவதிகள் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமற்போன யுவதியுடன் சென்ற நண்பர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்