உனவட்டுனவில் புதிய புனர்வாழ்வு மையம்

போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்காக உனவட்டுனவில் புதிய புனர்வாழ்வு மையம்

by Staff Writer 22-07-2021 | 9:35 AM
Colombo (News 1st) போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக காலி - உனவட்டுன பகுதியில் புனர்வாழ்வு மையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக தலங்கம - கொஸ்வத்த பகுதியிலேயே ஒரேயொரு மத்திய நிலையம் அமைந்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பிரியங்கி அமரபந்து குறிப்பிட்டுள்ளார். அங்கு தற்போது 6 பெண்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தற்போது போதைப்பொருளுக்கு பெண்கள் அதிகமாக அடிமையாவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் 4,265 பெண்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அவர்களில் 1,384 பெண்கள் ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் 1,564 பேர் கஞ்சா பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 23,566 பேர் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.