Colombo (News 1st) நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவின் கீழுள்ள கொட்டியாகல தோட்டம் கீழ்பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று (22) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
