நியூசிலாந்து மற்றும் கியூப தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர் 

by Staff Writer 22-07-2021 | 7:35 PM
Colombo (News 1st) புதிய தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்துள்ளனர். இதற்கமைய, இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகராக Michael Edward மற்றும் இலங்கைக்கான கியூப தூதுவராக Andres Marcelo Garrido ஆகியோர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்துள்ளனர். அரசாங்கம் என்ற ரீதியில் COVID பரவலின் ஆரம்பம் முதல் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் கிடைத்த பெறுபேறுகள் குறித்து இதன்போது ஜனாதிபதியால் தௌிவூட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சேதனப்பசளை பயன்பாடு மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் வலுசக்தி தேவையின் பெரும்பங்கை, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மூலம் பெற்றுக்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.