by Staff Writer 22-07-2021 | 6:19 PM
Colombo (News 1st) தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் ரிதியகம சஃபாரி பூங்கா என்பனவற்றை பொதுமக்களுக்காக மீளத்திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தெஹிவளை மிருகக்காட்சி சாலையை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் நாளாந்தம் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரிதியகம சஃபாரி பூங்காவும் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் காலை 8.30 முதல் மாலை 04 மணி வரை திறக்கப்படவுள்ளது.
COVID-19 தொற்று காரணமாக கடந்த மே மாதம் முதல் இவை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.