ஒலிம்பிக் போட்டியில் கொரோனா பரவலை தவிர்க்கமுடியாது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது: டெட்ரோஸ் அதனோம்

by Bella Dalima 22-07-2021 | 4:07 PM
Colombo (News 1st) டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் பிரச்சினையை முற்றிலும் ஒழிப்பது முடியாத காரியம் என குறிப்பிட்டுள்ள அவர், விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசிகளில், 75 சதவீதத்தை 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.