மேலும் 02 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன 

மேலும் 02 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன 

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2021 | 7:09 am

Colombo (News 1st) சீன தயாரிப்பிலான மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று (22) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இவற்றை 12 மாவட்டங்களுக்கு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அதற்கமைய,

📌 மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள்
📌 அம்பாறை மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள்
📌 நுவரெலியா மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள்
📌 புத்தளம் மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள்
📌 பதுளை மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகள்
📌 குருநாகல் மாவட்டத்திற்கு 400,000 தடுப்பூசிகள்
📌 காலி மாவட்டத்திற்கு 275,000 தடுப்பூசிகள்
📌 மாத்தறை மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகள்
📌 இரத்தினபுரி மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகள்
📌 பொலன்னறுவை மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள்
📌 மொனராகலை மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள்
📌 ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 125,000 தடுப்பூசிகள் என்ற அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

நாட்டிற்கு இதுவரையில் 91 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்