மல்லாகம் நீதிமன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருடியவர் கைது

மல்லாகம் நீதிமன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருடியவர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2021 | 10:44 am

Colombo (News 1st) யாழ். மல்லாகம் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளைத் திருடிய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் மற்றும் 4 துவிச்சக்கரவண்டிகள், 3 தொலைபேசிகள் மற்றும் வாள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மல்லாகம் நீதிமன்ற நடவடிக்கைக்காக வந்திருந்த ஒருவர் நிறுத்திவைத்திருந்த மோட்டார்சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்