காலி சிறைச்சாலை கைதி தூக்கிட்டு தற்கொலை

காலி சிறைச்சாலை கைதி தூக்கிட்டு தற்கொலை

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2021 | 1:08 pm

Colombo (News 1st) காலி சிறைச்சாலையின் கைதி ஒருவர் இன்று (22) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

26 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள குறித்த குற்றவாளிக்கு எதிராக 15 வழக்குகள் நிலுவையிலுள்ளன.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்