விண்வௌிக்கு சென்று திரும்பினார் ஜெஃப் பெசோஸ்

விண்வௌிக்கு சென்று திரும்பினார் ஜெஃப் பெசோஸ்

விண்வௌிக்கு சென்று திரும்பினார் ஜெஃப் பெசோஸ்

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2021 | 3:29 pm

Colombo (News 1st) அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) வெற்றிகரமாக விண்வௌிக்கு சென்று திரும்பியுள்ளார்.

57 வயதான அவர் தனது சொந்த நிறுவனம் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் மூலம் விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளார்.

ஜெஃப் பெசோஸிற்கு சொந்தமான Blue Origin உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் முதன்முறையாக மனிதர்களுடன் நேற்று (20) விண்ணில் செலுத்தப்பட்டது.

அதில், ஜெஃப் பெசோஸூடன் அவரது சகோதரா் மாா்க் பெசோஸ், பெண் விண்வெளி வீராங்கனை வாலி ஃபங்க் உள்ளிட்ட 3 போ் பயணித்துள்ளனர்.

முதல் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய ஜெப் பெசோஸ், ”இது வாழ்வின் மிக சிறந்த நாள்” என தெரிவித்துள்ளார்.

18 வயதாகும் மார்க் பெசோஸூம், 82 வயதாகும் வாலி ஃபங்கும் தான் விண்வெளிக்கு சென்ற மிகவும் குறைந்த மற்றும் அதிக வயதுடையவர்கள் ஆவர்.

இந்தப் பயணத்தின் மூலம், விண்வெளிக்கு சென்று திரும்பிய இரண்டாவது தொழிலதிபர் என்ற பெருமையை ஜெஃப் பெசோஸ் பெற்றுள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவை சோ்ந்த விா்ஜின் கலாக்டிக் என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளா் ரிச்சா்ட் பிரான்ஸன், அவரது நிறுவனம் தயாரித்த விண்வெளி விமானம் மூலம் கடந்த 11-ஆம் திகதி விண்வெளிக்கு சென்று வந்தார். இந்திய வம்சாவளியை சோ்ந்த ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 5 பேர் அந்த விண்வெளிப் பயணத்தில் இடம்பெற்றிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்