யாழில் தம்பதி மீது தாக்குதல்

யாழில் தம்பதி மீது தாக்குதல்

யாழில் தம்பதி மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2021 | 7:54 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – இணுவில், காரைக்கால் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

கணவன், மனைவி இருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

காயமடைந்த தம்பதியினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றையவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்