துமிந்த சில்வாவின் விடுதலை உத்தரவை வலுவிழக்க செய்யுமாறு ஹிருணிக்கா மனு தாக்கல்

துமிந்த சில்வாவின் விடுதலை உத்தரவை வலுவிழக்க செய்யுமாறு ஹிருணிக்கா மனு தாக்கல்

துமிந்த சில்வாவின் விடுதலை உத்தரவை வலுவிழக்க செய்யுமாறு ஹிருணிக்கா மனு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2021 | 1:54 pm

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, உயர் நீதிமன்றத்தில் இன்று (21) மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட 04 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கின் 11 ஆவது குற்றவாளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஆர். துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்து, ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபரும் நீதி அமைச்சர், துமிந்த சில்வா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்