Sinopharm தடுப்பூசியின் வினைத்திறன் தொடர்பில் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தால் அறிக்கை

by Staff Writer 20-07-2021 | 1:49 PM
Colombo (News 1st) டெல்டா வைரஸ் பிறழ்வுக்கு எதிராக Sinopharm தடுப்பூசி மிகுந்த வினைத்திறனுடன் செயற்படுகின்றமை ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினூடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. Sinopharm தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களில் 95 வீதமானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார். இதனூடாக Sinopharm தடுப்பூசி டெல்டா பிறழ்வுக்கு எதிராக சிறந்த பெறுபேறுகளை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.