by Staff Writer 20-07-2021 | 2:54 PM
Colombo (News 1st) பெட்ரோலிய வள சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2003 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க பெட்ரோலிய வள சட்டத்தை இரத்து செய்து, புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு புதிய சட்டமூலம் சட்டமா அதிபரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
புதிய சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வௌியிடுவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக, அதனை பாராளுமன்றத்திற்கு அனுப்ப அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.