ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது

எழுத்தாளர் Bella Dalima

20 Jul, 2021 | 3:03 pm

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, மும்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜஸ்தான் ராயல்ஸ் IPL அணியின் இணை உரிமையாளராக இருந்த ராஜ் குந்த்ராவை 2009-இல் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு 2012 இல் மகனும் 2020 இல் மகளும் பிறந்தார்கள்.

இந்நிலையில், ராஜ் குந்த்ராவை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் ஆபாசப் படங்கள் தொடர்பான வழக்கை மும்பை குற்றப்பிரிவு பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

ஆபாசப் படங்களை தயாரித்து செயலிகளில் வெளியிட்டதில் முக்கிய குற்றவாளியாக உள்ள ராஜ் குந்த்ரா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதான ராஜ் குந்த்ரா இந்த குற்றத்தில் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும் அதற்கான அனைத்து ஆதாரங்களும் பொலிஸாரிடம் இருப்பதாகவும் மும்பை பொலிஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்