டெல்டா பிறழ்வு குறுகிய காலத்தில் நாடளாவிய ரீதியில் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை

டெல்டா பிறழ்வு குறுகிய காலத்தில் நாடளாவிய ரீதியில் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

20 Jul, 2021 | 7:33 pm

Colombo (News 1st) இன்று (20) மேலும் 1062 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, COVID டெல்டா பிறழ்வு நாட்டில் வேகமாக பரவி வருவதாக இலங்கை வைத்தியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் 30 வீதமானோருக்கு டெல்டா பிறழ்வு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஏனைய வைரஸ்களை விட டெல்டா பிறழ்வு விரைவாக பரவும் தன்மையுடையது எனவும் இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் பத்மா குணரத்ன குறிப்பிட்டார்.

நாடு திறக்கப்பட்டு வழமைபோன்று செயற்பட்டால், டெல்டா பிறழ்வு மிக வேகமாக ஓரிரு வாரங்களுக்குள் பரவக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்